வெள்ளி, 7 நவம்பர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 7 நவம்பர் 2025 (11:14 IST)

பள்ளிகள், பேருந்து நிலையங்கள், மருத்துவமனைகளில் உள்ள தெருநாய்களை அகற்றுங்கள்: கோர்ட் உத்தரவு..!

பள்ளிகள், பேருந்து நிலையங்கள், மருத்துவமனைகளில் உள்ள தெருநாய்களை அகற்றுங்கள்: கோர்ட் உத்தரவு..!
இந்தியாவில் தெருநாய் கடி சம்பவங்கள் அபாயகரமாக அதிகரித்துள்ளதால், பள்ளிகள், மருத்துவமனைகள், பேருந்து நிலையங்கள் மற்றும் ரயில் நிலையங்கள் உள்ளிட்ட அனைத்துப் பொது இடங்களின் வளாகங்களிலிருந்தும் தெருநாய்களை அகற்றலாம் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 
நீதிபதிகள் விக்ரம் நாத் தலைமையிலான அமர்வு பிறப்பித்த உத்தரவில், தெருநாய்கள் நுழைவதை தடுக்க, இந்த பொது வளாகங்கள் முறையாக வேலியிடப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. உள்ளாட்சி அமைப்புகள் நாய்களை பிடித்து, கருத்தடை மற்றும் தடுப்பூசிக்கு பிறகு காப்பகங்களுக்கு மாற்ற வேண்டும்.
 
முக்கியமாக, நாய்கள் பிடிக்கப்பட்ட இடத்திலேயே மீண்டும் விடுவிக்கப்படக் கூடாது என்றும் நீதிமன்றம் தெளிவுபடுத்தியது. நாய்க்கடி சம்பவங்கள் அதிகரிப்பது குறித்த செய்தியை அடிப்படையாக கொண்டு நீதிமன்றம் தாமாக முன்வந்து இந்த வழக்கை விசாரித்து வருவது குறிப்பிடத்தக்கது. 
 
இது பொது சுகாதாரத்தைப் பாதுகாக்கும் நோக்கில் எடுக்கப்பட்ட முக்கியமான நடவடிக்கையாகும்.
 
Edited by Mahendran