வெள்ளி, 7 நவம்பர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Updated : வெள்ளி, 7 நவம்பர் 2025 (11:20 IST)

டெல்லியில் 100-க்கும் மேற்பட்ட விமானங்கள் கிளம்ப முடியாமல் தவிப்பு.. என்ன காரணம்?

டெல்லியில் 100-க்கும் மேற்பட்ட விமானங்கள் கிளம்ப முடியாமல் தவிப்பு.. என்ன காரணம்?
டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் இன்று காலை, விமானப் போக்குவரத்து கட்டுப்பாடு அமைப்பில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக 100-க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதமாகி பெரும் குழப்பம் நிலவியது.
 
தானியங்கி செய்தி மாற்று அமைப்பில் ஏற்பட்ட சிக்கலே இதற்கு காரணம் என்று இந்திய விமான நிலைய ஆணையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, கட்டுப்பாட்டாளர்கள் விமான திட்டங்களை கைமுறையாக செயல்படுத்தி வருவதால் தாமதங்கள் நீடிக்கின்றன. தொழில்நுட்ப குழுக்கள் போர்க்கால அடிப்படையில் பணியில் ஈடுபட்டுள்ளதாக அதிகாரிகள் உறுதி அளித்துள்ளனர்.
 
ஏர் இந்தியா, இண்டிகோ, ஸ்பைஸ்ஜெட் போன்ற விமான நிறுவனங்களும் இந்த எதிர்பாராத இடையூறால் விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக பயணிகளுக்கு அறிவித்துள்ளன. இது, கடந்த வாரம் ஜிபிஎஸ் ஸ்பூஃபிங் சம்பவங்களால் விமான போக்குவரத்து குழப்பத்தை எதிர்கொண்ட டெல்லி விமான நிலையத்தில் மீண்டும் ஒரு பெரிய சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
 
Edited by Mahendran