மணிக்கு 10 கிமீ வேகத்தில் நகரும் டிட்வா புயல்! சென்னையை நெருங்குகிறதா?
வங்கக்கடலில் தோன்றிய டிட்வா புயல், மணிக்கு பத்து கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து வருவதாகவும், தற்போது இந்த புயல் சென்னைக்கு 560 கிலோமீட்டர் தூரத்தில் மையம் கொண்டு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னைக்கு 560 கிலோமீட்டர் தூரத்திலும், புதுச்சேரிக்கு 460 கிலோமீட்டர் தெற்கு-தென்கிழக்கு திசையிலும் 'டிட்வா' புயல் மையம் கொண்டுள்ளது. கடந்த ஆறு மணி நேரத்தில் 10 கிலோமீட்டர் வேகத்தில் மிகவும் மெதுவாக வடக்கு மற்றும் வடமேற்கு திசையில் இந்த புயல் நகர்ந்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
எனவே, சென்னை நோக்கி இந்த புயல் வரும் வாய்ப்பு இல்லை என்றும், இருப்பினும் சென்னை உள்பட வட மாவட்டங்களில் மிதமான மழை முதல் கன மழை வரை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், தொடர் மழை காரணமாக ராமேஸ்வரம் வட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று ஒரு நாள் விடுமுறை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள மற்ற அனைத்து பகுதிகளிலும் பள்ளிகள் வழக்கம் போல் இயங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
Edited by Siva