1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. chennai-zero-tolerance-day-traffic-violations

சென்னையில் இன்று Zero Tolerance Day ... விதிமீறினால் வழக்கு!

zero tolerance day
சென்னையில் போக்குவரத்து விதிமீறல்களை கட்டுப்படுத்தும் நோக்கில், இன்று  ‘ZERO TOLERANCE DAY  கடைப்பிடிக்கப்பட உள்ளதாக சென்னை போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது.
 
இதையொட்டி, நகரின் முக்கிய சாலைகள் மற்றும் போக்குவரத்து அதிகம் உள்ள பகுதிகளில் போக்குவரத்து காவல்துறையினர்  சிறப்பு வாகன சோதனையில் ஈடுபட உள்ளனர்.
குறிப்பாக, ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டுவது, சீட் பெல்ட் அணியாமல் கார் ஓட்டுவது உள்ளிட்ட போக்குவரத்து விதிமீறல்களில்  ஈடுபடுவோர் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
 
மேலும், வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிகளை முறையாகப் பின்பற்றி, காவல்துறையின் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 Zero Tolerance Day  என்பதால் போக்குவரத்து விதிமீறல்களுக்கு எந்தவித தளர்வும் அளிக்காமல் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.
About Writer
சு. பாலகிருஷ்ணன்
18 ஆண்டுகள் தமிழ் முன்னணி  நாளிதழ்களின் டிஜிட்டல் செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர்.  அரசியல், பொழுதுபோக்கு செய்திகள் எழுதுவதில் ஆர்வம் உள்ளவர்.  .... Read More
அடுத்த கட்டுரையில்
ஒரே கல்லுல ரெண்டு மாங்கா!.. விரைவில் அம்பாசமுத்திரம் செல்லும் விஜய்..