வியாழன், 12 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வியாழன், 29 ஆகஸ்ட் 2024 (09:27 IST)

பராமரிப்பு பணிகள்: சென்னை கடற்கரை - தாம்பரம் மின்சார ரயில் சேவையில் மாற்றம்..!

Chennai electric train
பராமரிப்பு பணிகள் காரணமாக சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம் செல்லும் மின்சார ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது. இது குறித்து வெளியான அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

"சென்னை கடற்கரையில் இருந்து இன்று இரவு 9.10, 9.30 ஆகிய நேரங்களிலும், நாளை காலை 4.15 மணிக்கும் புறப்பட்டு தாம்பரம் செல்லும் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது. இதேபோல, தாம்பரத்தில் இருந்து இன்று இரவு 10.40, 11.20, 11.40 ஆகிய நேரங்களில் புறப்பட்டு சென்னை கடற்கரை வரும் மின்சார ரயில்கள் ரத்து.

அதேபோல் சென்னை கடற்கரையிலிருந்து இன்று இரவு 7.50 மணிக்கு புறப்பட்டு திருவள்ளூர் செல்லும் மின்சார ரயிலும், மறுமார்க்கமாக, திருவள்ளூரில் இருந்து இன்று இரவு9.35 மணிக்கு புறப்பட்டு சென்னை கடற்கரை வரும் மின்சார ரயிலும் ரத்து

கும்மிடிப்பூண்டியிலிருந்து இன்று இரவு 9.25 மணிக்கு புறப்பட்டு சென்னை கடற்கரை வரும் மின்சார ரயிலும், மறுமார்க்கமாக, சென்னை கடற்கரையிலிருந்து இன்று இரவு 10.45 மணிக்கு புறப்பட்டு கும்மிடிப்பூண்டி செல்லும் மின்சார ரயிலும் ரத்து

சென்னை கடற்கரையிலிருந்து இன்று இரவு 11.05, 11.30, 11.59 ஆகிய நேரங்களில் புறப்பட்டு தாம்பரம் செல்லும் மின்சார ரயில்கள் சென்னை கடற்கரை - எழும்பூர் இடையே பகுதி நேரமாக ரத்து செய்யப்பட்டு, எழும்பூரில் இருந்து இயக்கப்படும்.

சென்னை கடற்கரையிலிருந்து இன்று இரவு 10.40 மணிக்கும், நாளை காலை 3.55 மணிக்கும் புறப்பட்டு செங்கல்பட்டு செல்லும் மின்சார ரயில்கள் சென்னை கடற்கரை - எழும்பூர் இடையே பகுதி நேரமாக ரத்து செய்யப்பட்டு, எழும்பூரில் இருந்து இயக்கப்படும்.

செங்கல்பட்டிலிருந்து இன்று இரவு 8.45, 9.10, 10.10, 11.00 ஆகிய நேரங்களில் புறப்பட்டு சென்னை கடற்கரை வரும் மின்சார ரயில்கள் சென்னை எழும்பூர் - கடற்கரை இடையே பகுதி நேரமாக ரத்து செய்யப்பட்டு, எழும்பூரில் நிறுத்தப்படும்.

திருமால்பூரில் இருந்து இன்று இரவு 8.00 மணிக்கு புறப்பட்டு சென்னை கடற்கரை வரும் மின்சார ரயில் சென்னை எழும்பூர் - கடற்கரை இடையே பகுதி நேரமாக ரத்து செய்யப்பட்டு, எழும்பூரில் நிறுத்தப்படும்."

இவ்வாறு தென்னக ரயில்வே அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\


Edited by Siva