வியாழன், 12 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வியாழன், 29 ஆகஸ்ட் 2024 (07:36 IST)

காலை 10 மணிக்குள் எங்கெல்லாம் மழை பெய்யும்: சென்னை உள்பட 8 மாவட்டங்கள்..!

Chennai Rain
இன்று காலை 10 மணிக்குள் சென்னை உள்பட எட்டு மாவட்டங்களில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வளிமண்டல சுழற்சி காரணமாக கடந்த சில நாட்களாக சென்னை உள்பட தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் சற்றுமுன் சென்னை வானிலை ஆய்வு மையம் தனது சமூக வலைத்தளத்தில் சென்னை உள்பட 8 மாவட்டங்களில் இன்று காலை 10 மணிக்குள் மிதமான மழை பெய்யும் என்று அறிவித்துள்ளது.

சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், தென்காசி, தேனி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இன்று காலை 10 மணி வரை மிதமான மழை பெய்யும் என்றும் எனவே மேற்கண்ட எட்டு மாவட்டங்களில் உள்ள பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துக்கொள்ள வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே வங்கக்கடலில் இன்று காற்றழுத்த தாழ்வு மையம் உருவாகும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதை அடுத்து கடலோர பகுதிகளில் மிதமான மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Edited by Siva