திங்கள், 16 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: திங்கள், 11 டிசம்பர் 2023 (16:33 IST)

மெடிக்கல்களில் சிசிடிவி கட்டாயம் -மாவட்ட ஆட்சியர் உத்தரவு

medical shop
மதுரை மாவட்டத்தில்  போதை மாத்திரை விற்பனை புகார் வந்த நிலையில், மெடிக்கல்களில் சிசிடிவி கட்டாயம் என ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
 

மதுரை மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் சிறார்கள் அதிகளவு போதை மாத்திரைகள், போதை டானிக்குகள் பயன்படுத்தி வருவதாகவும்ம்  இதன் மூலம் பல குற்றச் சம்பவங்கள் நடந்து வருவதாக புகார் எழுந்தன.

இந்த நிலையில், சில நாட்களுக்கு முன்பு மதுரை மாவட்ட குழந்தைகள்   நல அலகு சார்பில் நடைபெற்ற ஆய்வு கூட்டத்தில் சிறுவர்கள் போதைக்கு அடிமையாவதை கட்டுப்படுத்த வேண்டும்,  போதை மாத்திரை விற்கும் மருந்தகங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென மாவட்ட ஆட்சியரிடம் கேட்டுக் கொண்டனர். இதையடுத்து  புதிய அறிவிப்பு வெளியிட்டிருந்தார்.

அதில், மதுரை மாவட்டத்தில் மருந்துகள் மற்றும் அழகு சாத பொருட்கள் சட்டம் -1940 மற்றும் விதிகள் 1945 அட்டவணைகள் X and H, H 1 Drugs குறிப்பிடுள்ள மருந்து, மாத்திரைகள் செய்யும் அனைத்து மருந்து கடைகளிலும், சிசிடிசி கட்டாயம் என்று உத்தரவிட்டுள்ளார்.

அனைத்துக் கடைகளிலும் இன்னும் 30 நாட்களுக்குள் சிசிடிவி பொருத்துவது கட்டாயம் எனவும் அப்படி செய்யவில்லை எனில், கடையின் உரிமையாளர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையை அடுத்துள்ள சுங்கவார் அருகே பேக்கரி உரிமையாளரை கத்தியை காட்டி மாமூல் வசூலித்த வழக்கில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.