கரூர் கூட்டநெரிசல் மரணங்கள் தொடர்பாக தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அவர் பெங்களூரில் பதுங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் கடந்த சனிக்கிழமை கரூரில் பிரச்சாரத்தில் ஈடுபட்டபோது ஏற்பட்ட கூட்டநெரிசலில் சிக்கி 41 பேர் பலியானார்கள். இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையின் வழக்குப்பதிவு செய்து கரூர் மாவட்ட தவெக நிர்வாகிகளை கைது செய்துள்ளனர்.
மேலும் தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மற்றும் துணை பொதுச்செயலாளர் நிர்மல் குமார் மீது வழக்குப்பதிவு செய்துள்ள நிலையில் அவர்கள் முன் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்தனர். அதை தொடர்ந்து புஸ்ஸி ஆனந்த், நிர்மல் குமாரை கைது செய்ய 3 தனிப்படைகள் அமைத்து உத்தரவிடப்பட்டது. தனிப்படையினர் அவர்கள் பதுங்கியிருக்கலாம் என சந்தேகிக்கப்படும் கோவை, திருப்பூர், சேலம் பகுதிகளில் தீவிர தேடுதலில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் பெங்களூரில் புஸ்ஸி ஆனந்த் பதுங்கியிருப்பதாக தகவல்கள் வெளியானதாகவும், அதை தொடர்ந்து தனிப்படையினர் பெங்களூர் விரைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி வருகிறது. விரைவில் அவர்கள் கைது செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
Edit by Prasanth.K