துர்கா சிலை ஊர்வலத்தில் விபரீதம்.. 2 பக்தர்கள் பரிதாப பலி: மத்தியப் பிரதேசத்தில் சோகம்!
மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில் துர்கா தேவி சிலையை ஏற்றி சென்ற வாகனத்தில் உயர் மின்னழுத்த மின்கம்பி உரசியதால் ஏற்பட்ட கோர விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்தனர்; 30-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
நேற்று இரவு கௌரா பஜார் பகுதியில் இந்த சம்பவம் நடந்தது. வாகனத்தில் இருந்த பைப் மின்கம்பியை தொட்டதால் மின்சாரம் பாய்ந்தது என காவல்துறை தெரிவித்துள்ளது. இதில் சின்டு விஸ்வகர்மா மற்றும் அகிலேஷ் படேல் ஆகியோர் உயிரிழந்தனர். காயமடைந்த 33 பேர் மருத்துவமனையில் தீவிரச் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மாநில அமைச்சர் மற்றும் மாவட்ட அதிகாரிகள் மருத்துவமனைக்கு விரைந்து சென்று ஆறுதல் கூறியதுடன், வழக்குப்பதிவு செய்து விசாரணை தொடங்கியுள்ளனர்.
இதற்கு சில நாட்களுக்கு முன்னர், காண்ட்வா பகுதியில் துர்கா சிலை கரைக்க சென்ற பக்தர்களை ஏற்றி சென்ற டிராக்டர் ஏரியில் கவிழ்ந்ததில் 11 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
Edited by Siva