திமுக செய்தத்தைதான் தவெகவும் செய்கிறது!. இதுதான் மாற்றமா?!.. அன்புமணி கேள்வி!..
தமிழக வெற்றிக் கழகம் ஆட்சிக்கு வந்து ஐந்து மாதங்கள் முடிந்து விட்டநிலையில் விலைவாசி கடுமையாக உயர்ந்திருப்பதாக எதிர்க்கட்சியினர் குற்றம் சுமத்தி வருகிறார்கள். குறிப்பாக அரிசி, பருப்பு ஆகியவற்றின் விலை கடுமையாக உயர்ந்திருக்கிறது.
ஒருபக்கம் ஆவின் பாலின் விலையும் அடிக்கடி உயர்த்தப்பட்டு வருகிறது. இது தொடர்பாக கருத்து தெரிவித்த அன்புமணி ராமதாஸ் கடந்த திமுக ஆட்சியில் மட்டும் ஆவின் பால் அல்லாத பிற பொருட்களின் விலைகள் 5 முறை உயர்த்தப்பட்டது.. மக்களுக்கு மாற்றத்தை வழங்கப்போவதாக கூறி ஆட்சிக்கு வந்த தமிழக வெற்றி கழகமும் அதே வழியைத்தான் பின்பற்றி வருகிறது.
கடந்த சட்டப் பேரவை பிரச்சாரத்தின் போது விலைவாசி உயர்வை முன்வைத்து பரப்பரை மேற்கொண்ட விஜய் இப்போது அதே விலைவாசி உயர்வை மக்களுக்கு பரிசாக கொடுத்துள்ளார்.. இதுதான் அவர் வாக்குறுதி அளித்த மாற்றமா? என அவர் கேள்வி எழுப்பி இருக்கிறார்.