திங்கள், 16 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By J.Durai
Last Modified: வியாழன், 12 அக்டோபர் 2023 (09:42 IST)

நட்ட நடுரோட்டில் இரும்பு வியாபாரி வெட்டி படுகொலை! – அலறி ஓடிய மக்கள்!

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அரசு மருத்துவமனை முன்பு இரும்பு கடையில் வேலை பார்த்தவரை 5 பேர் கொண்ட கும்பல் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை  ஏற்படுத்தி உள்ளது.


 
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அரசு மருத்துவமனை முன்பு உள்ள ஒரு இரும்பு கடையில் திண்டுக்கல் வேடபட்டியைச் சேர்ந்த அழகர் வயது(50) என்பவர்  கடந்த 10 தினங்களாக  வேலை பார்த்து வருகிறார்.

 இந்நிலையில் சற்றுமுன் இரண்டு  மோட்டார் சைக்கிளில் வந்த 5 பேர் கொண்ட மர்ம கும்பல் அழகரை சரமாரியாக வெட்டியது. இதில்,தலை,கழுத்து உள்ளிட்ட பல்வேறு இடங்களில் படுகாயம் ஏற்பட்ட அவர் சம்பவ இடத்திலே துடிதுடித்து  பலியானார்.

 நிலக்கோட்டை பகுதியிலிருந்து இரண்டு மோட்டார் சைக்கிளில் வந்த அந்த கும்பல் அவரை வெட்டி கொலை செய்துவிட்டு அதே பகுதியில் திரும்பிச் சென்றனர். நிலக்கோட்டை  செம்பட்டி சாலை அரசு மருத்துவமனை முன்பு பட்டப் பகலில் நடந்த இந்த கொலை சம்பவத்தை நேரில் பார்த்த  அந்த பகுதி பொதுமக்கள் அலறி அடித்து ஓடினர்.

 தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த நிலக்கோட்டை போலீசார் அழகரின் உடலை கைப்பற்றி பிரேத  பரிசோதனைக்காக, நிலக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

 இந்த கொலைக்கான  காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தனிப்படை அமைத்து கொலையாளிகளை தேடி வருகின்றனர். இச்சம்பவம் இப்பகுதியில்  பரபரப்பை  ஏற்படுத்தி உள்ளது.