திங்கள், 16 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : புதன், 4 அக்டோபர் 2023 (15:29 IST)

கிருஷ்ணசாமி கொலை முயற்சி வழக்கு- மூவருக்கு ஆயுள் தண்டனை

புதிய தமிழகம் என்ற கட்சியில் தலைவர் கிருஷ்ணசாமி கொலை முயற்சி வழக்கில்  மூவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

புதிய தமிழகம் என்ற கட்சியின் தலைவரும் மருத்துவருமான கிருஷ்ணசாமியை கடந்த 2004 ஆம் ஆண்டு நெல்லையில் வெடிகுண்டு வீசி கொலை முயற்சியில் ஈடுபட்ட  வழக்கு  நெல்லை வன்கொடுமை சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வந்தது.

அதன்படி, கிருஷ்ணசாமி மீதான கொலை முயற்சி வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 15  பேரில்  மூன்று பேர் இறந்த நிலையில், சிவா,  தங்கவேல், லட்சுமணன் ஆகிய மூவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 9 பேரை  நெல்லை வன்கொடுமை தடுப்பு நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.