1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. ameer comment about admk mla joining in tvk

பாஜகவின் வாஷிங்மெஷின் இப்போது தவெகவிடம்!.. வெளுத்து வாங்கிய அமீர்!...

vijay ameer
தமிழகத்தில் தற்போது தவெக ஆட்சியமைந்திருக்கிறது. ஆட்சியமைக்க மேலும் 10 எம்.எல்.ஏக்களின் ஆதரவு தேவைப்பட்ட நிலையில் திமுக கூட்டணியில் இருந்த விசிக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் மற்றும் முஸ்லீம் லீக் ஆகிய கட்சிகளிடம் ஆதரவு பெற்று தவெக ஆட்சி அமைந்திருக்கிறது.

தவெக தலைவர் விஜய் தமிழ்நாட்டில் முதலமைச்சர் பதவியில் அமர்ந்திருக்கிறார். அதுமட்டுமில்லாமல் பழனிச்சாமி தலைமையில் அதிருப்தியடைந்த 24 எம்.எல்.ஏக்கள் தவெகவுக்கு ஆதரவு தெரிவிப்பதாக அறிவித்தார்கள். அதோடு அதிலிருந்து நான்கு எம்.எல்.ஏக்கள் தங்களின் எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு தற்போது தவெகவில் இணைந்து விட்டார்கள். இதையடுத்து, தவெக தொடர்ந்து குதிரை பேரத்தில் ஈடுபட்டு வருவதாக முக ஸ்டாலின், எடப்பாடி பழனிச்சாமி, டிடிவி தினகரன் உள்ளிட்ட பலரும் தொடர்ந்து சொல்லி வருகிறார்கள்..

அதிமுக எம்.எல்.ஏக்களை ராஜினாமா செய்ய வைத்து இடைத்தேர்தலில் விசில் சின்னத்தில் போட்டியிட வைத்து தவெகவின் எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என தவெக கருதுவதாக தெரிகிறது.

இந்நிலையில் இதுபற்றி கருத்து தெரிவித்த இயக்குனர் அமீர் ‘அதிமுக எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்து விட்டு தலைமைச் செயலகத்திலேயே தவெகவில் இணைந்தது குதிரை பேரம் அல்ல.. அயோக்கியத்தனம்.. அவர்கள் என்ன மாநில உரிமைக்காகவா ராஜினாமா செய்தார்கள்?.. ஓட்டு போட்ட மக்கள் என்ன முட்டாளா?.. அவர்களை மீண்டும் போட்டியிட வைத்தால் மிகப்பெரிய ஜனநாயக படுகொலை.. இதற்குமுன் பாஜகதான் இதை செய்தது.. தற்போது பாஜகவின் வாஷிங்மெஷின் தவெகவிடம் இருக்கிறது’ என சொல்லியிருக்கிறார்.
About Writer
பாலகிருஷ்ணன்