1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. actor sanjay talk about his polytical entry

இதனாலதான் விஜய்கிட்ட நான் சீட் கேக்கல!.. ஓப்பனாக பேசிய சஞ்சய்!..

sanjay vijay
முன்னாள் நடிகர் மற்றும் இந்நாள் தமிழக முதலமைச்சர் விஜய் சென்னை லயோலா கல்லூரியில் படித்த போது அவருடன் படித்தவர் சஞ்சய். அப்போதிலிருந்து இப்போது வரைக்கும் விஜயின் நெருங்கிய நண்பராக விஜய் வலம் வருகிறார். கிட்டத்தட்ட இருவருக்கும் 35 வருட கால நட்பு. தனது நண்பர் முதல்வர் விஜய் பற்றி சஞ்சய் ஊடகங்களில் அவ்வப்போது பகிர்வதுண்டு. சஞ்சய் சின்ன திரையில் பிரபலமான நடிகராக இருப்பவர். மேலும் திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார்.

விஜயின் நண்பர்கள் குரூப்பில் இருந்தவர்களில் ஸ்ரீநாத் தற்போது அமைச்சராக இருக்கிறார். ஆனால் சஞ்சய் அரசியலுக்கு வரவில்லை. இதுபற்றி கருத்து தெரிவித்த சஞ்சய் ‘விஜய்க்கு மட்டுமல்ல. எங்க குரூப்பில் உள்ள எல்லோருக்கும் மக்களுக்கு சேவை செய்யணும் என்கிற எண்ணம் இருக்கு.. மத்தவங்கலாம் 10 ரூபா இருந்தா 2 ரூபா குடுப்பாங்க. ஆனா நான் 10 ரூபாய் இருந்தா 8 ரூபா குடுத்துட்டு 2 ரூபா வீட்டுக்கு கொண்டு போவேன்..

ஆனா என் நண்பன் எதற்காகவே போய் விஜயிடம் சீட் கேட்க முடியுமா? நான் என்ன செஞ்சேன்னு ஒன்னு இருக்குல்ல  இப்ப நான் கட்சிக்காக வேலை செய்கிறேன்.. பின்னாடி கண்டிப்பா நான் கேட்பேன்’ என சொல்லியிருக்கிறார்..
About Writer
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்..... બધા વાંચો