புதுசா ஒன்னு வரும்போது அதிர்வு வரும் - பன்ச் டயலாக் பேசிய தனுஷ்
நடிகர் விஜயை தொடந்து நடிகர் தனுஷும் அரசியலுக்கு வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது. சமீபகாலமாகவே தொடர்ந்து தனுஷ் தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளை சந்தித்து பேசி வருகிறார். சமீபத்தில் கூட ரசிகர் மன்ற பெண் நிர்வாகிகளை சந்தித்து அவர்களுக்கு காமாட்சி அம்மன் விளக்கை பரிசாக கொடுத்தார். அதில், தாமரை சின்னமும் இடம் பெற்றிருந்தது.
ஒருபக்கம், சில நாட்களுக்கு முன்பு டெல்லி சென்ற தனுஷ் அங்கு சில ஆர்.எஸ்.எஸ் மற்றும் பாஜக தலைவர்களை சந்தித்து பேசியதாக செய்திகள் கசிந்தது. மேலும், 2028ம் வருடம் அரசியல் வருகையை அறிவித்துவிட்டு 2031ம் வருட தேர்தலில் தனுஷின் அரசியல் கட்சி போட்டியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், நேற்று ஓம் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய தனுஷ் எனக்கு பின்னால் யாரோ இருப்பதாக பேசுகிறார்கள். அப்படி யாரும் இல்லை. என் பக்கம் ரசிகர்களும், மக்களும்தான் இருக்கிறார்கள். நான் என்ன பேசினாலும் எதாவது சொல்வார்கள். அதற்காக பேசாமலும் இருக்க முடியாது. புதிதாக ஒன்று உருவாகும்போது அதிர்வு இருக்கத்தான் செய்யும் என அவர் பேசியிருக்கிறார்.