திங்கள், 16 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By J.Durai
Last Modified: வெள்ளி, 27 செப்டம்பர் 2024 (16:52 IST)

80 அடி ஆழ கிணற்றில் விழுந்த 70 வயது மூதாட்டி உயிருடன் மீட்பு....

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த வெள்ளாளப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் கலைச்செல்வி (70).    இவர், ராசிபுரம் அடுத்த சேந்தமங்கலம் பிரிவு சாலை பகுதியில் உள்ள திருமுருகன் நகர் பகுதியில் தனது இரண்டு மகளுடன் வசித்து வருகிறார். 
 
இவர், தனது வீட்டிற்கு அருகில் உள்ள விவசாய தோட்டத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வருகிறார்.
இந்நிலையில், தோட்டதிற்கு தண்ணீர் எடுத்து விட   சென்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக விவசாயக் கிணற்றில் தவறி விழுந்துள்ளார்.
 
அக்கம், பக்கத்தினர் சத்தம் கேட்டு ராசிபுரம் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். 
 
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் சுமார் 80 அடி ஆழம் உள்ள கிணற்றில் இறங்கி கயிறு மூலம் கலைச்செல்வியை உயிருடன் மீட்டனர்.