திங்கள், 16 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By J.Durai
Last Modified: புதன், 4 செப்டம்பர் 2024 (09:38 IST)

சாலையோரம் சென்ற இளம் பெண்ணின் கையை பிடித்து இழுத்த போதை நபரால் பரபரப்பு!

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பாச்சி செட்டித் தெருவை சேர்ந்த 41 வயதுடைய நபர் ஒருவர்,தனது இரு சக்கர வாகனத்தில், ராசிபுரம் அடுத்த சேந்தமங்கலம் பிரிவுச் சாலையில் சென்றார். 
 
அப்போது, சாலையோரம் சென்ற இளம் பெண் ஒருவரின் கையை பிடித்து இழுந்துவிட்டு நிற்காமல் வேகமாகச் சென்றார்.   
இதையறிந்த அப்பகுதி வாலிபர்கள் சிலர், இருசக்கர வாகனத்தில் சென்றவனை துரத்திப்பிடித்து நிறுத்தினர். 
 
அவன் போதையில் இருந்தது தெரியவந்தது.     பின்னர்,அவனுக்கு தர்ம அடி கொடுத்து, அனுப்பினர்.   
 
இச்சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.