திங்கள், 16 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By J.Durai
Last Modified: வெள்ளி, 27 செப்டம்பர் 2024 (16:46 IST)

தனியார் நிதி நிறுவனத்தினர் அராஜகம்:கணவன் வாங்கிய கடனுக்கு மனைவின் ஸ்கூட்டரை எடுத்து செல்லும் ஊழியர்!

வேலூர் மாவட்டம் குடியாத்தம் பிச்சனூர்பேட்டை பகுதியை சேர்ந்த சத்யா என்ற பெண் ட டெய்லர் கடை நடத்தி வருகிறார்.
 
இந் நிலையில் தனியார் நிதி நிறுவனத்தில் சத்யாவின் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார் இதற்கிடையே இறந்த கணவர் கடன் பெற்றதாகவும் அதனை செலுத்தவில்லை எனவும் அதனை திருப்ப செலுத்த வேண்டும் என வலியுறுத்தி  கூறப்படுகிறது.
 
இந் நிலையில் தவணை தொகையினை செலுத்தவில்லை.
 
இந் நிலையில் டெய்லர் சத்யா கடைக்கு சென்ற நிதி நிறுவன ஊழியர் தனது கணவர் வாங்கிய கடனுக்கு அசலும் வட்டியும் கட்டவில்லை ஆகவே உங்க ஸ்கூட்டரை எடுத்து செல்வேன் என கூறி லாக் போடப்பட்ட வண்டியின் லாக்கை உடைத்து வண்டியினை எடுத்து செல்வது வீடியோ வைரலாகி வருகிறது.