1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. kolathur tvk mla vs babu passed away today

கொளத்தூர் தொகுதி எம்.எல்.ஏ வி.எஸ்.பாபு காலமானார்.. தவெகவினர் அதிர்ச்சி..

vs babu
2026 சட்டமன்றத் தேர்தலில் சென்னை கொளத்தூர் தொகுதியில் திமுக தலைவர் முக ஸ்டாலினை எதிர்த்து போட்டியிட்டவர் தவெக வேட்பாளர் வி.எஸ் பாபு. அந்த தொகுதியில் அவர் முக ஸ்டாலினை தோற்கடித்து வெற்றி பெற்றார். அதன்பின் இரண்டு கைகளையும் ஆட்டியவாறு வி.எஸ் பாபு காட்டிய உடல் மொழி சமூக வலைதளங்களில் வைரலானது.

இந்நிலையில்தான், செப்டம்பர் 9ம் தேதி அவர் உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். கடந்த பல நாட்களாக எம்.ஜி.எம் மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.  நாள்பட்ட நுரையீரல் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த வி.எஸ்.பாபுவுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று பிற்பகல் 2.24 மணிக்கு அவர் மாரடைப்பு காரணமாக காலமானதாக தற்போது அறிவிக்கப்பட்டிருக்கிறது.

2011ம் வருடம் திமுகவில் இருந்த வி.எஸ் பாபு அதன்பின் அந்த கட்சியிலிருந்து விலகி அதிமுகவில் இணைந்தார். ஜெயலலிதாவின் மறைவுக்கு பின் அமமுகவில் இணைந்தார். அதன்பின் அந்த கட்சியிலிருந்து விலகி எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் மீண்டும் அதிமுகவில் இணைந்தார்.

ஆனால் விஜய் தமிழக வெற்றிக் கழகத்தை தொடங்கி 2026 சட்டமன்ற தேர்தலை சந்தித்தபோது தவெகவில் இணைந்து கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். தற்போது வி.எஸ் பாபு காலமாகிவிட்ட நிலையில் தமிழகத்தில் காலியாக இருக்கும் தொகுதிகள் எண்ணிக்கை 6-ஆக உயர்ந்துள்ளது..


About Writer
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்..... Read More
அடுத்த கட்டுரையில்
பெண் குழந்தையை உயிரோடு புதைத்த தாய் - ராமேஸ்வரத்தில் கொடூரம்..