1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
  4. Nutmeg gives amazing relief for various ailments !!

பல்வேறு நோய்களுக்கு அற்புத நிவாரணம் தரும் ஜாதிக்காய் !!

நோய்கள்
தூக்கமின்மை பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் ஜாதிக்காய் பொடி அரை ஸ்பூன் அளவு எடுத்து, சூடான பாலில் கலந்து குடித்து வந்தால் தூக்கம் நன்றாக வரும்.

பல் வலி உள்ள இடத்தில் 2 சொட்டு ஜாதிக்காய் எண்ணெயை தடவினால் பல் வலி பறந்தோடும்.
 
அஜீரண பிரச்னையால் அவதிபடுபவர்கள் ஜாதிக்காய் 100 கிராம், சுக்கு 100 கிராம், சீரகம் 300 கிராம் எடுத்து நன்றாக தூள் செய்து உணவுக்கு முன் 2 கிராம் அளவு எடுத்து சாப்பிட்டு வந்தால் அஜீரணம் பிரச்சனை சரியாகும்.
 
ஜாதிக்காய் விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரித்து, விந்து முந்துதலை தடுக்கும். தாம்பத்தியம் தொடர்பான பல்வேறு பிரச்சனைகளுக்கு ஜாதிக்காய் சிறந்த தீர்வாகும்.
 
ஜாதிக்காயை சந்தனத்துடன் அரைத்து முகத்தில் போட முகப்பரு, கரும் புள்ளிகளால் ஏற்பட்ட தழும்புகள் நீங்கும்.
 
ஜாதிக்காயை பாதி உடைத்து ஒரு டம்ளர் நீரில் போட்டுக் காய்ச்சி அதில் ஒரு அவுன்ஸ் வீதம் தண்ணீர் கலந்து குடிக்க காலரா முதலிய வாந்தி, பேதி போன்றவை தீரும்.
 
ஜாதிக்காய் தூளை வாழைப்பழத்துடன் கலந்து சாப்பிட்டு வந்தால் அஜீரணத்தால் ஏற்படும் வயிற்றுப் போக்கு பிரச்சனை தீரும்.
அடுத்த கட்டுரையில்
சாதரணமாக எல்லா இடங்களிலும் கிடைக்கும் அம்மான் பச்சரிசி மூலிகையின் பயன்கள் !!