1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Madras High Court Questions DMK's Stance on Governor's Powers in Anbil Mahesh Case

நீங்கள் தானே ஆளுநர் பதவியை ஆட்டுத்தாடியுடன் ஒப்பிட்டீர்கள்.. அன்பில் மகேஸ் வழக்கில் நீதிபதி கேள்வி..

anbil magesh
முந்தைய திமுக ஆட்சிக்காலத்தில் தனியார் பள்ளிகளுக்கு அனுமதிகள் பெற்று தருவதாக கூறி ரூ.100 கோடிக்கு மேல் சட்டவிரோதமாக வசூல் செய்ததாக கூறப்படும் வழக்கில், முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் மற்றும் பி.டி. அரசகுமார் உள்ளிட்டோருக்கு எதிராக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 
 
இந்த வழக்கை ரத்து செய்ய கோரி அன்பில் மகேஸ் தாக்கல் செய்த மனு சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதி வி. லட்சுமிநாராயணன் முன்பு விசாரணைக்கு வந்தது.
 
அப்போது, ஆளுநரின் ஒப்புதல் இல்லாமல் அரசுத்துறை செயலாளரின் அனுமதி பெற்று மட்டுமே வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக அன்பில் மகேஸ் தரப்பில் வாதிடப்பட்டது. இதை கேட்ட நீதிபதி, "ஆளுநர் பதவியை ஆட்டுத்தாடியுடன் ஒப்பிட்ட திமுக, ஆளுநரின் அதிகாரம் பற்றி இப்போது எப்போது பேச ஆரம்பித்தது?" என்று கேள்வி எழுப்பினார். மேலும், முன்ஜாமீன் கோரி எப்போது மனுத்தாக்கல் செய்ய போகிறீர்கள் என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
 
இதற்கு பதிலளித்த மனுதாரர் தரப்பு, நாளை முன்ஜாமீன் மனு தாக்கல் செய்ய உள்ளதாக தெரிவித்ததுடன், வழக்கின் விசாரணயை தள்ளிவைக்குமாறு கோரியது. இதையேற்ற நீதிபதி, இந்த மனு மீதான விசாரணையை அக்டோபர் 29-ஆம் தேதிக்குத் தள்ளிவைத்து உத்தரவிட்டுள்ளார்.
About Writer
SIVA
வெப்துனியாவில் 10 ஆண்டுகளுக்கும் மேல் பணிபுரிந்து வருகிறேன். அரசியல் செய்திகள், பொழுதுபோக்கு, டெக்னாலஜி, மருத்துவம், பிசினஸ் செய்திகள் எழுதுவேன்..... Read More
அடுத்த கட்டுரையில்
மார்பிங் மற்றும் டீப்ஃபேக் வீடியோ விவகாரம்: கங்கனா ரனாவத் தொடுத்த வழக்கில் அதிரடி உத்தரவு...