1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
  4. Imran Khan Writes Emotional Letter to Judiciary Warning of Critical Health and Solitary Confinement in Prison

இம்ரான்கான் மனைவிக்கு கண்பார்வை பறிபோகும் அபாயம்.. சிறையில் இருந்து எழுதிய கடிதத்தால் பரபரப்பு..

இம்ரான் கான்
பாகிஸ்தான் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதமரும், தெரீக்-இ-இன்சாப் கட்சியின் தலைவருமான இம்ரான் கான், நீதித்துறைக்கு எழுதியுள்ள உருக்கமான கடிதம் சர்வதேச அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
கடந்த 2023 முதல் சிறையில் உள்ள அவர், கடந்த ஆண்டு டிசம்பர் முதல் தினமும் சுமார் 22 மணி நேரம் தனிமைச்சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். குடும்பத்தினர், வழக்கறிஞர்கள் மற்றும் மகன்களுடன் பேசவோ, புத்தகங்கள் படிக்கவோ தனக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தனது கடிதத்தில் குற்றம்சாட்டியுள்ளார்.
 
தமக்கு ஏற்பட்டுள்ள கடும் ரத்த அழுத்த மாறுபாடு காரணமாக மூளையில் ரத்தக்கசிவு அல்லது மாரடைப்பு ஏற்படும் அபாயம் உள்ளதாக மருத்துவர்கள் எச்சரித்துள்ளதாக இம்ரான் கான் குறிப்பிட்டுள்ளார். மேலும், தனது மனைவி புஷ்ரா பீபிக்கு உடனடியாகக் கண் அறுவை சிகிச்சை செய்யாவிட்டால் பார்வை நிரந்தரமாக பறிபோகும் அபாயம் உள்ளதாகவும், ஆனால் சிறை நிர்வாகம் உரிய மருத்துவ சிகிச்சையை மறுத்து வருவதாகவும் அவர் வேதனை தெரிவித்துள்ளார்.
 
நீதிமன்ற உத்தரவுகளை நடைமுறைப்படுத்தி தமக்கும் மனைவிக்கும் முறையான சிகிச்சை அளிக்க வேண்டும் என்றும், காலம் தாழ்த்தாமல் மனிதாபிமான அடிப்படையில் நீதி வழங்க வேண்டும் என்றும் அவர் உச்சநீதிமன்ற நீதிபதிகளுக்குக் கோரிக்கை விடுத்துள்ளார்.
 
About Writer
SIVA
வெப்துனியாவில் 10 ஆண்டுகளுக்கும் மேல் பணிபுரிந்து வருகிறேன். அரசியல் செய்திகள், பொழுதுபோக்கு, டெக்னாலஜி, மருத்துவம், பிசினஸ் செய்திகள் எழுதுவேன்..... Read More
அடுத்த கட்டுரையில்
ஒரே இடத்தில் தொடர்ந்து நிலை கொண்டிருக்கும் அக்வான் புயல்.. தற்போதைய நிலை என்ன?