1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
  4. elan musk shares gone down because of result

இடைத்தேர்தல் எதிரொலி - எலன் மஸ்க் நிறுவனத்தின் பங்குகள் கடும் சரிவு

elan musk
2 நாட்களுக்கு முன்பு அமெரிக்க நாடாளுமன்ற இடைத்தேர்தல் நடைபெற்ற நிலையில் பிரதிநிதிகள் எனப்படும் கீழவை மற்றும் செனட் எனப்படும் மேலவை ஆகிய இரண்டிலும் அதிபர் டிரம்பின் குடியரசு கட்சி தோல்வி அடைந்தது.

நேற்று காலை 11 மணி நிலவரப்படி 436 இடங்களை கொண்ட பிரதிநிதிகள் சபையில் 187 இடங்களை ஜனநாயகக் கட்சி கைப்பற்றிய நிலையில், டிரம்பின் குடியரசுக் கட்சி 110 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றிருந்தது. 100 இடங்களை கொண்ட செனட் சபையில் பெரும்பான்மைக்கு 50 இடங்கள் தேவை. ஆனால், ஜனநாயக கட்சி 51 இடங்களில் வெற்றிபெற்றுவிட்டது. டிரம்பின் குடியரசு கட்சி 40 இடங்களில் வெற்றி பெற்றது.

டிரம்பின் ஆதரவாளரான அமெரிக்கா தொழிலதிபர் எலன் மஸ்க்கின் பணபலத்தையும் மீறி ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜேம்ஸ் தாலரிகோ டெக்சாஸ் செனட் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார். குடியரசுக் கட்சியின் கென் பாக்ஸ்டனை வெற்றிபெற வைக்க, தேர்தல் பிரச்சாரங்களுக்காக எலன் மஸ்க் சுமார் ரூ.1900 கோடி பணத்தை செலவு செய்திருந்தார். ஆனாலும் அவர் வெற்றிபெறவில்லை..

இந்நிலையில், தேர்தல் தோல்வி காரணமாக எலன் மஸ்க்கின் டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் கடும் சரிவை சந்தித்துள்ளது. இதன் காரணமாக ஒரே நாளில் எலன் மஸ்க்கின் சொத்து மதிப்பு ரூ.35.2 பில்லியன் டாலர் குறைந்துவிட்டதாக சொல்லப்படுகிறது.
About Writer
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்..... Read More
அடுத்த கட்டுரையில்
அன்பில் மகேஷ் ஃபாரினுக்கு ஓடமாட்டார்.. ஜாமின் கொடுங்க - நீதிமன்றத்தில் வாதம்...