1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. 15 Dismissed From Guidance Tamilnadu Over Alleged Investment Leak to Andhra Pradesh

தமிழகத்துக்கு வரவேண்டிய தொழில் முதலீட்டு ரகசியங்கள்.. கசிய விட்ட 15 பேர் பணிநீக்கம்...

வழிகாட்டி தமிழ்நாடு
தமிழகத்துக்கு வரவேண்டிய தொழில் முதலீட்டு ரகசியங்களை ஆந்திர மாநிலத்துக்கு கசியவிட்டதாக குற்றச்சாட்டின் பேரில், வழிகாட்டி தமிழ்நாடு முகமையில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றிய 15 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். முதலீடுகள் ஆந்திராவுக்கு செல்வதாக எதிர்க்கட்சிகள் விமர்சித்து வரும் நிலையில், தவெக அரசு அதனை மறுத்து வருகிறது.
 
முந்தைய நிர்வாக காலத்தில் ரகசியங்களை பாதுகாப்பதற்கான உரிய ஒப்பந்தங்கள் இன்றி பலர் பணியில் சேர்க்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பணிநீக்கம் செய்யப்பட்டவர்களில் கிறிஸ்டோ லாரல், பிரபாகரன் அண்டி மற்றும் ப்ரீஜா பிரசாத் ஆகிய மூவர் உடனடியாக ஆந்திர மாநில பொருளாதார மேம்பாட்டு வாரிய பணியில் இணைந்துள்ளனர்.
 
முதலீட்டு தகவல்களைக் கையாண்டவர்கள் உடனடியாக அண்டை மாநில வாரியத்தில் சேர்ந்திருப்பது பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் பணியாற்றியபோதே அவர்கள் ஆந்திராவுடன் தொடர்பில் இருந்தனரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. தொழில் ரகசியங்களை பாதுகாக்க நிர்வாக ரீதியான கடுமையான விதிமுறைகளை உறுதி செய்ய வேண்டிய அவசியத்தை இந்த சம்பவம் சுட்டிக்காட்டுகிறது.
About Writer
SIVA
வெப்துனியாவில் 10 ஆண்டுகளுக்கும் மேல் பணிபுரிந்து வருகிறேன். அரசியல் செய்திகள், பொழுதுபோக்கு, டெக்னாலஜி, மருத்துவம், பிசினஸ் செய்திகள் எழுதுவேன்..... Read More
அடுத்த கட்டுரையில்
அக்வான் புயல் ஏமாற்றினாலும் பரவாயில்லை.. நவம்பர் 23 முதல் தமிழகத்தில் மழை.. வானிலை எச்சரிக்கை..