1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. சந்தை நிலவரம்
  4. Stock Market Rebounds: Sensex Jumps 1,109 Points, Nifty Settles at 22,721

திடீரென உச்சத்திற்கு சென்றது பங்குச்சந்தை.. ஒரே நாளில் சென்செக்ஸ் 1000 புள்ளிகளுக்கும் மேல் உயர்வு..

பங்குச் சந்தை
இன்றைய பங்குச் சந்தை வர்த்தகம் வலுவான மீட்சியுடன் நிறைவடைந்துள்ளது. ஐடி, நிதி மற்றும் எஃப்எம்சிஜி துறைப் பங்குகள் ஏற்றம் கண்டன. இதன் காரணமாக, சென்செக்ஸ் 1,109.10 புள்ளிகள் உயர்ந்து 73,033.78 புள்ளிகளாகவும், நிஃப்டி 358.60 புள்ளிகள் உயர்ந்து 22,721.95 புள்ளிகளாகவும் நிறைவடைந்தன. கடந்த நான்கு மாதங்களில் பங்குச் சந்தையில் பதிவான மிகப்பெரிய ஒற்றை நாள் ஏற்றமாக இது அமைந்தது.
 
எச்.சி.எல் டெக் நிறுவனம் தனது 2வது காலாண்டு நிகர லாபத்தில் 21.18 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளதாக அறிவித்ததே இந்த சந்தை ஏற்றத்திற்கு முக்கியக் காரணமாக இருந்தது. மேலும், டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் 6.59 சதவீதமும், டெக் மஹிந்திரா 4.90 சதவீதமும், இன்ஃபோசிஸ் 4.44 சதவீதமும் உயர்வைச் சந்தித்தன.
 
அந்நியச் செலாவணி வர்த்தகத்தில், ரிசர்வ் வங்கி எடுத்த நடவடிக்கைகளைத் தொடர்ந்து ரூபாய் மதிப்பு சுமார் 41 காசுகள் உயர்ந்து ரூ. 95.37 ஐ எட்டியுள்ளது. வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் 1,708.48 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை விற்பனை செய்துள்ளனர். உலகளாவிய பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை 1.66 சதவீதம் சரிந்து, பீப்பாய் ஒன்றுக்கு 104.6 அமெரிக்க டாலராக உள்ளது.
 
About Writer
SIVA
வெப்துனியாவில் 10 ஆண்டுகளுக்கும் மேல் பணிபுரிந்து வருகிறேன். அரசியல் செய்திகள், பொழுதுபோக்கு, டெக்னாலஜி, மருத்துவம், பிசினஸ் செய்திகள் எழுதுவேன்..... Read More
அடுத்த கட்டுரையில்
ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவுடன் தமிழக முதல்வர் விஜய் சந்திப்பு.. முக்கிய பேச்சுவார்த்தை...