1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. TVK Chief Vijay to Campaign Directly in Dharapuram After London Trip

லண்டனில் இருந்து திரும்பியவுடன் முதல் வேலை தேர்தல் பிரச்சாரம் தான்.. முதல்வர் விஜய் முடிவு...

joseph vijay
லண்டன் பயணம் மேற்கொண்டுள்ள தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் மற்றும் முதல்வர் விஜய், அங்கிருந்து தமிழகம் வந்ததும் அடுத்த சில மணி நேரத்தில் தாராபுரம் தொகுதிக்கு வந்து தீவிரத் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரண்டு தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் களம் தற்போது தமிழக அரசியலில் உச்சக்கட்ட எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ.க்களான சத்யபாமா மற்றும் மரகதம் குமரவேல் ஆகியோர் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துவிட்டுத் தவெகவில் இணைந்த நிலையில், தற்போது தாராபுரத்தில் சத்யபாமாவும், மதுராந்தகத்தில் மரகதம் குமரவேலும் தவெகவின் அதிகாரப்பூர்வ வேட்பாளர்களாகக் களமிறக்கப்பட்டுள்ளனர். இந்த அதிரடி அரசியல் நகர்வு ஆளுங்கட்சியான திமுகவையும், பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவையும் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
 
இருபெரும் திராவிடக் கட்சிகளின் கோட்டையாகக் கருதப்படும் தொகுதிகளில் தவெகவின் காலடித் தடத்தைப் பதிக்கும் மிக முக்கியமான சோதனைக் களமாக இந்த இடைத்தேர்தல் பார்க்கப்படுகிறது. 
 
லண்டனில் இருந்து திரும்பும் விஜய் நேரடியாகத் தாராபுரத்தில் முகாமிட்டு மேற்கொள்ளவிருக்கும் சூறாவளிப் பிரச்சாரம், தேர்தல் களத்தின் ஒட்டுமொத்த திசையையும் மாற்றிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தத் தேர்தல் தமிழக அரசியலில் ஒரு புதிய மாற்றத்திற்கான தொடக்கமாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.
 
Edited by Siva
About Writer
SIVA
வெப்துனியாவில் 10 ஆண்டுகளுக்கும் மேல் பணிபுரிந்து வருகிறேன். அரசியல் செய்திகள், பொழுதுபோக்கு, டெக்னாலஜி, மருத்துவம், பிசினஸ் செய்திகள் எழுதுவேன்..... Read More
அடுத்த கட்டுரையில்
இடைத்தேர்தலில் ஜெயிப்பது பெரிய விஷயமில்லை.. அதிமுக, திமுக டெபாசிட் வாங்க கூடாது.. முதல்வர் விஜய் உத்தரவா?