1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. Ritabrata Banerjee Announces Opposition Withdrawal If Mamata Banerjee Contests West Bengal By-Election

இடைத்தேர்தலில் மம்தா போட்டியிட்டால் வாபஸ் பெறுவோம்.. திரிணமூல் அதிருப்தி அணி அறிவிப்பு...

மேற்கு வங்க இடைத்தேர்தல்
மேற்கு வங்கத்தில் நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் திரிணமூல் காங்கிரஸ் தலைவரும், முன்னாள் முதல்வருமான மமதா பானர்ஜி போட்டியிட்டால், தங்களது அணியின் வேட்பாளரை வாபஸ் பெறுவதாக அதிருப்தி அணித் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான ரிதப்ரதா பானர்ஜி அறிவித்துள்ளார். 
 
கடந்த சட்டப்பேரவை தேர்தலில் மமதா பானர்ஜியின் கட்சி பெருந்தோல்வியை சந்தித்ததை அடுத்து, கட்சியில் ஏற்பட்ட உள்கட்சிப் பூசல் காரணமாக ரிதப்ரதா பானர்ஜி தலைமையில் அதிருப்தி அணி உருவாகியது. தற்போது பெரும்பான்மை ஆதரவுடன் அவர் எதிர்க்கட்சி தலைவராக செயல்பட்டு வருகிறார்.
 
வரும் அக்டோபர் 6 ஆம் தேதி நந்திகிராம் மற்றும் ரெஜிநகர் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள நிலையில், மமதா பானர்ஜி நந்திகிராம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற வேண்டும் என ரிதப்ரதா பானர்ஜி விருப்பம் தெரிவித்துள்ளார். 
 
கட்சிப் பெயர் மற்றும் சின்னம் தொடர்பான சர்ச்சைகள் நீடித்து வரும் சூழலில், மமதா களமிறங்கினால் எதிர்க்கட்சி அணி சார்பில் வேட்பாளர் நிறுத்தப்பட மாட்டார் என்ற இந்த அறிவிப்பு அம்மாநில அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
 
Edited by Siva
About Writer
SIVA
வெப்துனியாவில் 10 ஆண்டுகளுக்கும் மேல் பணிபுரிந்து வருகிறேன். அரசியல் செய்திகள், பொழுதுபோக்கு, டெக்னாலஜி, மருத்துவம், பிசினஸ் செய்திகள் எழுதுவேன்..... Read More
அடுத்த கட்டுரையில்
வார்த்தைகளை அளந்து பேச வேண்டும். இல்லையென்றால், அதே மொழியில் பதில் சொல்வோம்: அமைச்சர் ரமேஷ் எச்சரிக்கை..