1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : புதன், 16 ஏப்ரல் 2025 (09:00 IST)

திருப்பதி கோவில் மீது ட்ரோன் பறக்கவிட்ட யூடியூபர்.. கைது செய்த போலீசார்..!

பாதுகாப்பு காரணங்களுக்காக திருப்பதி மலை மீது ட்ரோன் பறக்க விடுவதற்கு தடை செய்யப்பட்டுள்ள நிலையில், யூடியூபர் ஒருவர் திருப்பதி மலையில் ட்ரோன் பறக்க விட்டதை அடுத்து அவரை  போலீசார் கைது செய்து விசாரணை செய்து வருவதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
ராஜஸ்தானை சேர்ந்த அன்ஷுமான் தரேஜா என்ற யூடியூபர் நேற்று மாலை திருமலை ஏழுமலையான் கோவிலுக்கு எதிரே உள்ள ஹரிணாம சங்கீர்த்தனை மண்டபத்தில் இருந்து ட்ரோன் கேமராவை பறக்கவிட்டு வீடியோவை பதிவு செய்தார்.
 
திடீரென திருப்பதி கோவில் மேல் ட்ரோன் பறந்ததை எடுத்து அதிர்ச்சி அடைந்த கோவில் நிர்வாகிகள் இதுகுறித்து விசாரணை செய்தபோது யூடியூபர் தான் அந்த வேலையை செய்தது என்பதை கண்டுபிடித்தனர்.
 
திருப்பதியில் ட்ரோன் பறக்க விடுவது குற்றம் என்ற நிலையில் அவரை பிடித்த விஜிலன்ஸ் படையினர் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் அவரை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
 
யூட்யூபில் வீடியோ பதிவு செய்வதற்கு மட்டும்தான் ட்ரோன் கேமராவை பயன்படுத்தினாரா அல்லது வேறு ஏதேனும் காரணத்திற்காக ட்ரோன் மூலம் கோவிலை  படம் பிடித்தாரா என்பது குறித்து அவரிடம் விசாரணை செய்யப்படுகிறது.
 
இந்த சம்பவம் திருப்பதி பக்தர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
Edited by Siva