பாகிஸ்தான் ஜிந்தாபாத் என்று கூறியவர் அடித்துக் கொலை.. கிரிக்கெட் போட்டி நடந்த இடத்தில் விபரீதம்..!
கர்நாடக மாநிலத்தில் உள்ளூர் கிரிக்கெட் போட்டி நடந்து கொண்டு இருந்தபோது, பாகிஸ்தான் ஜிந்தாபாத் என பாகிஸ்தான் ஆதரவு கோஷம் எழுப்பிய இளைஞர் ஒருவர், ஒரு கும்பலால் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.
கர்நாடக மாநிலத்தில் உள்ளூர் கிரிக்கெட் போட்டி நடந்து கொண்டிருந்தபோது, அதில் பத்து அணிகள் கலந்து கொண்டன. இதில் கேரளாவை சேர்ந்த இளைஞர், கிரிக்கெட் போட்டி நடந்து கொண்டிருந்தபோது திடீரென பாகிஸ்தான் ஜிந்தாபாத் என கோஷம் எழுப்பியுள்ளார்.
இதனால் ஆத்திரம் அடைந்த அந்த பகுதியில் இருந்த கும்பல், அவரிடம் வாக்குவாதம் செய்து, ஒரு கட்டத்தில் அந்த நபரை சரமாரியாக அடிக்க தொடங்கினர். தடியாலும் கம்பாலும் அடிக்கப்பட்ட நிலையில், அந்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதனை அடுத்து, அந்த கும்பல் தப்பித்து சென்றதாகவும், இளைஞரின் உடலை கைப்பற்றிய கர்நாடகா போலீஸ், இந்த சம்பவத்தில் 15 பேரை கைது செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
பெஹல்காம் தாக்குதலுக்கு பின், பாகிஸ்தான் மீது இந்தியர்கள் கடும் கோபத்தில் இருக்கும் நிலையில், பாகிஸ்தான் ஜிந்தாபாத் என்று கூறியதை கேட்டு அதிர்ச்சி அடைந்து, சரமாரியாக அடித்து உதைத்து கொலை செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Edited by Siva