1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 16 ஏப்ரல் 2025 (12:51 IST)

கருப்பாய் இருந்த புது மருமகளை கேலி செய்த குடும்பம்! விரக்தியில் மணப்பெண் எடுத்த சோக முடிவு!

கர்நாடகாவில் திருமணமான புது மணப்பெண் கருப்பாக இருந்ததை மாப்பிள்ளை வீட்டார் கிண்டல் செய்ததால் அவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

கர்நாடக மாநிலம் கதக் மாவட்டத்தில் உள்ள சரண பசவேஸ்வரா நகரை சேர்ந்தவர் அமரேஷ். இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வரும் நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இவருக்கு பூஜா என்ற பெண்ணோடு திருமணம் நடந்தது. பூஜா கருப்பாக இருந்ததால் அமரேஷ் வீட்டில் மாமியார், மாமனார், மைத்துனர் என அனைவரும் அவரை கிண்டல் செய்ததாகவும், வேறு சில தொல்லைகள் கொடுத்ததாகவும் கூறப்படுகிறது.

 

இதனால் விரக்தியடைந்த பூஜா தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டுள்ளார். திருமணமான 4 மாதங்களிலேயே மணப்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீஸார், தற்கொலை செய்யும் முன் பூஜா எழுதிய கடிதத்தை வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆனால் பூஜா தற்கொலை செய்து கொள்ளவில்லை, அமரேஷ் வீட்டார் பூஜாவை கொன்றுவிட்டு தற்கொலை செய்து கொண்டது போல நாடகமாடுகிறார்கள் என பூஜாவின் குடும்பத்தார் குற்றம் சாட்டியுள்ளனர். 

 

Edit by Prasanth.K