1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 20 ஏப்ரல் 2025 (15:35 IST)

”சார் ப்ளீஸ் பாஸ் பண்ணி விடுங்க!” - விடைத்தாளில் 500 ரூபாயை லஞ்சமாக சொருகிய மாணவன்!

Karnataka Exam sheet

நாடு முழுவதும் சமீபத்தில் பள்ளி ஆண்டு தேர்வுகள் நடந்து முடிந்த நிலையில் கர்நாடகாவில் மாணவன் ஒருவர் விடைத்தாளில் பணத்தை வைத்து அனுப்பிய சம்பவம் வைரலாகியுள்ளது.

 

நாடு முழுவதும் உள்ள மாநில பாடத்திட்ட பள்ளிகள், சிபிஎஸ்இ பள்ளிகள் என அனைத்து பள்ளிகளிலும் கடந்த மாதம் முதலாக ஆண்டு தேர்வும், 10,11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வும் நடந்து முடிந்தது. இந்நிலையில் விடைத்தாள்களை திருத்தும் பணியில் ஆசிரியர்கள் ஈடுபட்டுள்ளனர். 

 

அவ்வாறாக கர்நாடகாவில் விடைத்தாளை திருத்தும் பணியில் ஆசிரியர்கள் ஈடுபட்டிருந்தபோது பல மாணவர்கள் தங்களுக்கு பாஸ் மார்க் போடும்படி கேட்டு பணத்தை சேர்த்து பின் செய்திருந்தது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் பெலகாவியில் பேப்பர் திருத்தியபோது இதுபோன்று ரூபாய் தாள்களுடன், பாஸ் செய்யக்கோரி வேண்டுதல் கடிதத்தையும் மாணவர்கள் இணைத்துள்ளனர். மேலும் சிலர் ‘நீங்கள் என்னை பாஸ் செய்ய வைப்பதில்தான் என் காதலின் எதிர்காலமே உள்ளது’ என்று அழாத குறையாக வேண்டுதல் வைத்துள்ளதெல்லாம் ஆசிரியர்களுக்கு சிரிப்பை வரவழைத்துள்ளது.

 

Edit by Prasanth.K