ஞாயிறு, 28 செப்டம்பர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : புதன், 17 செப்டம்பர் 2025 (17:22 IST)

மாடியில் இருந்து கீழே விழுந்து பலியான ஏழு வயது சிறுமி.. விபத்து இல்லை கொலை என திடீர் திருப்பம்..!

மாடியில் இருந்து கீழே விழுந்து பலியான ஏழு வயது சிறுமி.. விபத்து இல்லை கொலை என திடீர் திருப்பம்..!
கர்நாடக மாநிலம், பெங்களூருவில் அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்த ஏழு வயது சிறுமியின் மரணத்தில், எதிர்பாராத திருப்பம் ஏற்பட்டுள்ளது. இந்த மரணம் விபத்து அல்ல, அது ஒரு திட்டமிட்ட கொலை என்பது காவல்துறையின் விசாரணையில் தெரியவந்துள்ளது.
 
கடந்த மாதம் 27-ஆம் தேதி, மூன்றாவது மாடியில் இருந்து தவறி விழுந்ததாகக் கூறப்பட்ட சிறுமி ஒருவர் உயிரிழந்தார். அவர் மாடியில் விளையாடிக் கொண்டிருந்தபோது கால் தடுக்கி விழுந்ததாகக் கூறி, காவல்துறையினர் வழக்கு பதிவு செய்திருந்தனர்.
 
சிறுமியின் தந்தை சித்தார்த், தனது முதல் மனைவி இறந்த பிறகு, ராதா என்பவரை இரண்டாவது திருமணம் செய்துகொண்டார்.  சித்தார்த்தின் முதல் மனைவிக்குப் பிறந்த குழந்தை தான் கீழே விழுந்து இறந்தது.
 
இந்த நிலையில் சிறுமி விழுந்தபோது அருகிலிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது, சிறுமி கீழே விழுந்த சமயத்தில் அவரது சித்தி ராதா அருகில் நின்றிருந்தது தெளிவாக பதிவாகியுள்ளது. மேலும், சில கோணங்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தபோது, ராதாதான் சிறுமியை வேண்டுமென்றே கீழே தள்ளிவிட்டதும் உறுதியானது.
 
இதனைத் தொடர்ந்து, காவல்துறையினர் ராதா மீது கொலை வழக்கு பதிவு செய்து, அவரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
 
Edited by Siva