சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு: ஸ்பாட் புக்கிங் குறைப்பு!
சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜைக்காக நேற்று ஒரே நாளில் மட்டும் சுமார் 80,000 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்துள்ளனர். இதனால் சன்னிதானத்திலும் நடைபாதை நெடுகிலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.
பக்தர்களின் வருகை கட்டுக்கடங்காமல் அதிகரித்ததன் காரணமாக, நேற்று முதல் ஸ்பாட் புக்கிங் மூலம் வழங்கப்படும் அனுமதி, நாள் ஒன்றுக்கு 5,000 பேராக மட்டுமே குறைக்கப்பட்டுள்ளது.
இன்று காலையும் சன்னிதானத்தில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. பக்தர்கள் சுமார் 8 மணி நேரம் முதல் 12 மணி நேரம் வரை காத்திருந்து ஐயப்பனை தரிசித்து செல்கின்றனர்.
நீண்ட நேரம் காத்திருக்க நேரிடுவதால், பக்தர்கள் முன்கூட்டியே தரிசன நேரம் ஒதுக்கீடு செய்து வர அறிவுறுத்தப்படுகிறார்கள்.
Edited by Siva