திருப்பதிகளில் தங்கும் அறைகளை ஏற்பாடு செய்து தரப்படும் என்று ஆன்லைனில் நூற்றுக்கணக்கானோரை மோசடி செய்ததாக கூறப்படும் தகவல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தினந்தோறும் திருப்பதிக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தரும் நிலையில், தங்கும் அறைகள் கிடைப்பதில் சிக்கல் உள்ளது. இந்த நிலையில், திருப்பதி மலையில் தங்கும் அறைகள் ஏற்பாடு செய்து தரப்படும் என ஆன்லைனில் முன்பதிவு செய்த நூற்றுக்கணக்கான பக்தர்கள் பணம் இழந்ததாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக வெளி மாநில பக்தர்களை குறிவைத்து போலி இணையதளங்களில் விளம்பரம் செய்யப்பட்டதாகவும், இதனால் பாதிக்கப்பட்ட பக்தர்கள் திருப்பதி தேவஸ்தானத்தில் புகார் அளித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளன. திருப்பதிக்கு வரும் பக்தர்கள் ஆன்லைன் விளம்பரங்களை பார்த்து ஏமாற வேண்டாம் என்றும், தேவஸ்தான அலுவலகத்தில் மட்டுமே தங்குவதற்கான அறைகள் தரப்படும் என்றும் தேவஸ்தானம் அறிவுறுத்தி உள்ளது. Edited by Siva