1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : திங்கள், 26 மே 2025 (07:16 IST)

வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்களின் மனைவிக்கு ரூ.1.10 கோடி.. ப்ரீத்தி ஜிந்தாவின் மனித நேயம்..!

Preity Zinta
பாலிவுட் நடிகை மற்றும் ஐபிஎல் அணியான பஞ்சாப் கிங்ஸ் குழு உரிமையாளரான ப்ரீத்தி ஜிந்தா, ராணுவத்தில் வீரமரணம் அடைந்த வீரர்களின் மனைவிகள் மற்றும் அவர்களின் குழந்தைகளுக்காக ரூ.1.10 கோடி நன்கொடை வழங்கியுள்ளார். இந்த நிதி, ஏப்ரல் 22ம் தேதி பஹல்காம் பகுதியில் நிகழ்ந்த பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து தொடங்கப்பட்ட “ஓப்பரேஷன் சிந்தூர்” திட்டத்தின் கீழ், South Western Command-இன் கீழ் செயல்படும் ராணுவத் துணைவியர் நல அமைப்பான AWWA-க்கு வழங்கப்பட்டுள்ளது.
 
ப்ரீத்தி ஜிந்தா தனது பஞ்சாப் கிங்ஸ் குழுவின் நிறுவன  நிதியிலிருந்து இந்த தொகையை வழங்கியுள்ளார். வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்களின் மனைவிகளை வலுப்படுத்தவும், அவர்களின் குழந்தைகளுக்கான கல்வியை ஆதரிக்கவும் இந்த நன்கொடை பயன்படுகிறது.
 
ஜெய்ப்பூரில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் ப்ரீத்தி ஜிந்தா கூறியதாவது: “நமது ராணுவ வீரர்களின் தியாகங்களை திருப்பிக் கொடுக்க இயலாது. ஆனால், அவர்களின் குடும்பங்களுக்குப் பக்கமாக நின்று ஆதரிக்கலாம். நாட்டு பாதுகாப்பிற்காக அவர்களது பங்களிப்பை பெருமிதத்துடன் மதிக்கிறோம்” என்றார்.
 
இந்த நிகழ்வில் South Western Command-இன் கமாண்டர், AWWA பிராந்தியத் தலைவர் மற்றும் ராணுவ குடும்பத்தினர் கலந்துகொண்டனர்.
 
Edited by Siva