திங்கள், 16 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: சனி, 16 டிசம்பர் 2023 (10:35 IST)

மோடி, யோகியின் காலம் முடிந்ததும் ராமர் கோயிலை இடிப்பேன்: பரபரப்பை கிளப்பிய முதியவரின் வீடியோ

ram temple
மோடி மற்றும் யோகியின் காலம் முடிந்ததும் ராமர் கோயிலை இடிப்பேன் என முதியவர் ஒருவர்  பேசியிருக்கும் வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.  
 
அந்த வீடியோவில் அவர் ’ராமர் கோயில் செய்து வழிபடுங்கள், ஆனால் மோடி மற்றும் யோகியின் காலம் இருக்கும் வரை தான். இவர்களது இருவரது காலம் முடிந்த பின்னர் ராமர் கோயிலை இடித்து தூக்கி எறிவோம் என்று கூறியுள்ளார்.  
 
மேலும் விரைவில் மோடி மற்றும் யோகியின் ஆட்சி முடியும் என்றும் அவர்கள் நினைப்பது அவர்களுக்கு மட்டும் தான் நல்லதாக இருக்கிறது மற்றவர்களுக்கு   அச்சத்தை தருகிறது என்றும் அவர் தெரிவித்தார்.  
 
இந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வரும் நிலையில் அந்த முதியோருக்கு சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள்  கண்டனம் தெரிவித்து வருகின்றனர். நீங்கள் உங்கள் மதத்தை, உங்கள் கடவுளை மட்டும் போற்றுங்கள் மற்ற மதத்தின் கடவுள்களை இழிவு செய்யாதீர்கள் என்று பொதுமக்கள் கூறி வருகின்றனர்
 
Edited by Mahendran