1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. more than seven thousand studetns got hiv

கர்நாடகாவில் 7 ஆயிரம் மாணவர்களுக்கு HIV!.. அதிர்ச்சி செய்தி!..

hiv
எய்ட்ஸ் என அழைக்கப்படும் உயிர் கொல்லி நோய் பரவலாக ஒழிக்கப்பட்டுள்ளது என பலரும் நம்புகிறார்கள். ஆனால் அதில் உண்மை இல்லை. இப்போதும் இந்தியாவில் உள்ள எல்லா மாநிலங்களிலும்அரசு மருத்துவமனைக்கு சென்றால் HIV  வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் பற்றிய தகவல்கள் தெரிய வரும்.

அதே நேரம் 30 வருடங்களுக்கு முன்பு இருந்ததை விட தற்போது குறைந்திருக்கிறது. கட்டுக்குள் வந்திருக்கிறது. சரியான மருந்துகளை உட்கொண்டால் இந்த நோயால் பாதிக்கப்பட்டிருந்தாலும் பல வருடங்கள் வாழ முடியும் என்கிற முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது. ஒருபக்கம், ஆணுறை பயன்படுத்தும் பழக்கம் என்பது தற்போது ஆண்களிடம் பரவலாக அதிகரித்திருக்கிறது..

அதேநேரம், இந்தியாவில் HIV வைரஸ் ஒழிந்துவிட்டதா என்றால் இல்லை.. இந்நிலையில்தான் கர்நாடகாவில் 18 முதல் 25 வயதுக்குட்பட்ட 7 ஆயிரத்திற்கும்  ற்பட்ட கல்லூரி மாணவர்களுக்கு HIV வைரஸ் தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதியாகியிருக்கிறது.

இந்த விவகாரம் அந்த மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் நோய் தொற்றை தடுத்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அனைத்து கல்லூரிகளிலும் சிறப்பு மருத்துவ மற்றும் பரிசோதனை முகாம்களை நடத்த அந்த மாநில அரசு உத்தரவிட்டிருக்கிறது.
About Writer
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்..... Read More
அடுத்த கட்டுரையில்
இன்னும் 30 வருஷம் குடிச்சா தமிழனோட DNA அழிஞ்சிரும்!.. சுகாதார நிபுணர் எச்சரிக்கை!..