19 ஆண்டுகள் தலைமறைவாக இருந்தவர் கைது.. கிராம பஞ்சாயத்து தலைவர் வேடத்தில் இருந்ததாக தகவல்..!
மகாராஷ்டிர மாநிலம் லத்தூர் மாவட்டத்தில், மோசடி வழக்கில் 19 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த 53 வயது நபர் ஒருவரை காவல்துறை கைது செய்தது. கைதான நபர் அபங் பிரபு என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இவர் ஒரு கிராமத்தின் கிராமத் தலைவர் என்று பொய்யாக சொல்லிக்கொண்டு, குழந்தைகளுக்கு போலி பிறப்பு சான்றிதழ்களை தயாரித்து, மக்களை ஏமாற்றியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
அபங் பிரபுvஉக்கு எதிராக 2006 ஆம் ஆண்டு ஜூன் 14 ஆம் தேதி காந்தி சௌக் காவல் நிலையத்தில், அப்போதைய இந்தியத் தண்டனைச் சட்டத்தின் (IPC) பல்வேறு பிரிவுகளின் கீழ் மோசடி மற்றும் பிற குற்றங்களுக்காக வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
அபங் பிரபு தலைமறைவாகி அடிக்கடி தனது இருப்பிடங்களை மாற்றிக்கொண்டே இருந்தார். ஒரு கிராமத்திலிருந்து மற்றொரு கிராமத்திற்கு பயணித்து, தன்னை பொய்யாக ஒரு கிராம பஞ்சாயத்தின் சர்பஞ்ச் என்று அடையாளப்படுத்தி கொண்டுள்ளார்.
சமீபத்தில், அபங் பிரபு லத்தூர் மாவட்டத்தில் உள்ள போப்ளி பகுதியில் தங்கியிருப்பதாக சிறப்புக் குழுவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில், சோதனை நடத்தி அவரை பிடித்து கைது செய்தனர்.
Edited by Siva