ஒன்றல்ல.. இரண்டல்ல.. 550 இண்டிகோ விமானங்கள் ரத்து.. மன்னிப்பு கேட்டு அறிக்கை..!
இந்தியாவின் முன்னணி விமான நிறுவனமான இண்டிகோ, தொடர்ச்சியான செயல்பாட்டு சிக்கல்களால் நேற்று நாடு முழுவதும் சுமார் 550 விமானங்களை ரத்து செய்துள்ளது. டெல்லி, மும்பை, ஹைதராபாத் உட்பட முக்கிய நகரங்களில் 191 விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால், விமான நிலையங்களில் குழப்பம் நிலவியது.
இண்டிகோ நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், வாடிக்கையாளர்களிடம் மனமார்ந்த மன்னிப்பு கோரப்பட்டுள்ளது. செயல்பாடுகளில் ஏற்பட்ட இடையூறுகளை குறைக்க DGCA, AAI போன்ற அமைப்புகளின் ஆதரவுடன் பணியாற்றி வருவதாக குறிப்பிட்டுள்ளது.
நவம்பர் மாதத்தில் மட்டும் 1,232 விமானங்கள் ரத்து மற்றும் தாமதத்தை சந்தித்ததால், சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் விசாரணைக்கு உத்தரவிட்டது.
இண்டிகோ அளித்த பதிலில், ரத்து செய்யப்பட்ட விமானங்களில் 755 விமானங்கள் ஊழியர்கள் பற்றாக்குறையாலும், 92 விமானங்கள் வான்வழி போக்குவரத்து கட்டுப்பாட்டு தோல்வியாலும் ரத்து செய்யப்பட்டதாகத்தெரிவிக்கப்பட்டுள்ளது.
மோசமான வானிலை, நெரிசல், தொழில்நுட்ப கோளாறுகள் போன்றவையும் இதற்கு காரணம் என்று தலைமை நிர்வாக அதிகாரி பீட்டர் எல்பெர்ட் ஊழியர்களுக்கு அனுப்பிய மின்னஞ்சலில் குறிப்பிட்டுள்ளார்.
Edited by Siva