பாகிஸ்தான் யூடியூபருடன் நெருக்கம்.. ஜோதி மல்ஹோத்ரா குறித்த திடுக் தகவல்..!
ஹரியானாவை சேர்ந்த யூடியூபர் ஜோதி மல்வோத்ரா மீது உளவுத்துறை மற்றும் பாதுகாப்புப் படைகள் வைக்கப்பட்ட உளவு குற்றச்சாட்டுகள் தொடர்பாக முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.
அவரது மொபைல் தொலைபேசி தரவுகள் பாகிஸ்தானை சேர்ந்த பிரபல யூடியூபர் ஜீஷான் ஹுசைனுடன் அடிக்கடி தொடர்பில் இருந்ததை காட்டுகின்றன. ஜீஷானுடன் இணைந்து பாகிஸ்தானை நேர்மறையாக வெளிக்காட்டும் பிரச்சார பணியில் ஈடுபட்டிருந்ததாக கூறப்படுகிறது.
இரண்டு மாதங்களுக்கு முன் ஜோதி மத வழிபாட்டு விசாவை கொண்டு பாகிஸ்தான் சென்று, கடாஸ்ராஜ் கோவிலில் ஜீஷானை சந்தித்துள்ளார். இதை தொடர்ந்து இருவரும் தங்கள் யூடியூப் சேனல்களில் பாகிஸ்தானை புகழ்ந்து வீடியோக்கள் வெளியிட்டனர். ஆனால் பாகிஸ்தானில் இந்துக்கள் மற்றும் கோவில்களுக்கு எதிராக நடக்கும் நடைமுறைகள் உலகுக்கு தெரிந்தவை.
ஜீஷான், ஜோதி மல்வோத்ராவை இந்தியாவின் நபராக இல்லாமல் பாகிஸ்தானின் பெண்ணாகவே அழைத்துள்ளார். இந்திய எல்லை பாதுகாப்பு பற்றிய தகவல்களை அவர் ஜீஷானுடன் பகிர்ந்தாரா என்ற கோணத்தில் விசாரணை நடைபெறுகிறது.
இந்நிலையில் ஜோதி கடந்த ஆண்டு ஏப்ரலில் உஜ்ஜைனில் உள்ள மகாகாளேஷ்வர் கோவிலுக்கு சென்றிருந்தது தெரிய வந்ததால், மத்தியப்பிரதேச போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர். ஆனால் சந்தேகத்திற்கு உரிய எந்த தகவலும் இல்லை என்று போலீஸ் தெரிவித்துள்ளது.
Edited by Siva