வியாழன், 12 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 6 நவம்பர் 2024 (08:59 IST)

இந்தியர்களுக்கு காலவரையற்ற இலவச விசா!? தாய்லாந்து அறிவிப்பால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி!

Thailand

இந்தியர்கள் அதிகம் சுற்றுலா சென்று வரும் தாய்லாந்து நாட்டில் இந்தியர்களுக்கான விசா இல்லா பயணத்தை காலவரையின்றி நீட்டித்துள்ளனர்.

 

 

ஆசிய தீவு நாடான தாய்லாந்து சுற்றுலாவுக்கு புகழ்பெற்ற நாடாக விளங்கி வருகிறது. இந்தியாவிலிருந்து குறைந்த கட்டணத்திலேயே தாய்லாந்து சென்று வர முடியும் என்பதால் இந்தியாவிலிருந்து நிறைய சுற்றுலா பயணிகள் தாய்லாந்து சென்று வருகின்றனர். இதனால் சில மாதங்கள் முன்னதாக இந்திய சுற்றுலா பயணிகளை கவரும் விதமாக, தாய்லாந்து அரசு விசா இல்லாமல் தாய்லாந்து செல்ல அனுமதி வழங்கி அறிவிப்பை வெளியிட்டது.

 

அதை தொடர்ந்து தாய்லாந்தில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளதாக தெரிகிறது. அதனால் தற்போது இந்தியா பயணிகள் விசா இல்லாமல் தாய்லாந்து செல்வதற்கான சலுகையை காலவரையின்றி நீட்டித்துள்ளது தாய்லாந்து அரசு. இவ்வாறாக விசா இல்லாமல் செல்லும் சுற்றுலா பயணிகள் 60 நாட்கள் வரை தாய்லாந்தி தங்க அனுமதிக்கப்படுவார்கள். இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

 

Edit by Prasanth.K