வியாழன், 12 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 5 நவம்பர் 2024 (12:24 IST)

அமெரிக்க அதிபர் தேர்தல்.. வெற்றி வேட்பாளரை கணித்த தாய்லாந்து நீர்யானை..!

அமெரிக்க அதிபர் தேர்தல் இன்று நடைபெற இருக்கும் நிலையில் இந்த தேர்தலில் வெற்றி பெறுபவர் யார் என்பதை தாய்லாந்து நீர்யானை கணித்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. 
 
அமெரிக்காவில் இன்று தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் குடியரசு கட்சியின் வேட்பாளராக டிரம்ப் மற்றும் ஜனநாயக கட்சியின் வேட்பாளராக கமலா ஹாரிஸ் ஆகிய இருவரும் போட்டியிடுகின்றனர். 
 
தேர்தல் முடிவடைந்ததும் வாக்குகள் எண்ணப்பட்டு வெற்றி வேட்பாளர் யார் என்பது இன்னும் ஓரிரு நாளில் தெரியவரும் என்ற நிலையில் தாய்லாந்தில் உள்ள நீர்யானை அமெரிக்கா அதிபர் தேர்தலில் வெற்றி பெறுபவர் யார் என்பது குறித்து கணித்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
 
 அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளர் வெற்றி பெறுவார் என்று தாய்லாந்து நீர்யானை கணித்துள்ளது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அமெரிக்க வரலாற்றிலேயே முதல் முறையாக வெற்றி பெறுபவர் யார் என்பதை ஊடகங்களால் கூட சரியாக கணிக்க முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது
 
 
Edited by Mahendran