திங்கள், 16 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: வியாழன், 4 ஜனவரி 2024 (11:23 IST)

இஸ்லாமியர்கள் பெயரில் போலி இமெயில்.. உபி முதல்வருக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த இருவர் கைது..!

email
இஸ்லாமியர் பெயரில் போலி இமெயில் உருவாக்கி உத்தரபிரதேச மாநில முதல்வருக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. 
 
உத்தர் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கொல்லப்படுவார் என மர்ம ஈமெயில் ஒன்று வந்ததை அடுத்து சிறப்பு புலனாய்வு போலீசார் இது குறித்து விசாரித்தனர். மேலும் அந்த இமெயிலில் ராமர் கோயில் வெடிவைத்து தகர்க்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. 
 
இந்த இமெயில் இரண்டு இஸ்லாமியர்கள் அனுப்பியதாக முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்த நிலையில் தற்போது இஸ்லாமியர் பெயரில் போலி இமெயில் அனுப்பியதாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

 
ஓம் பிரகாஷ் மிஸ்ரா மற்றும் தஹார் சிங் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இவர்களின் பின்னணி குறித்து சிறப்பு போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.  
 
உத்தரபிரதேசத்தில் கலவரத்தை தூண்ட விஷமமான செயலை செய்தது உள்பட பல பிரிவுகளில் இவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
 
Edited by Mahendran