1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 25 மே 2025 (11:12 IST)

சட்லெஜ் நதியின் நீர்வரத்து 75% குறைந்தது.. நதியின் பாதையை மாற்றியதா சீனா? இந்தியா அதிர்ச்சி..!

பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் ஜம்மு-காஷ்மீர் பகல்‌காமில் பயணிகளின் மீது  தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து, இந்திய அரசு இந்தியா–பாகிஸ்தான் இடையிலான சிந்து நதிநீர் உடன்படிக்கையை நிறுத்தி, பாகிஸ்தானுக்கு செல்லும் நீரை தற்காலிகமாக தடை செய்தது.
 
இந்நிலையில், சீனாவிலிருந்து இந்தியாவுக்கு வரும் நீரிலும் சந்தேகங்கள் எழுந்துள்ளன. முன்னாள் நாசா நிலைய மேலாளரும், நிலவர வரைபட ஆராய்ச்சியாளருமான டாக்டர் வி.நித்யானந்தா கூறுவதாவது, சட்லெஜ் நதி இந்தியாவுக்குள் வருவதற்கு முன்பே அதன் நீரோட்டம் கணிசமாக குறைந்துள்ளதாக என கண்டுபிடித்துள்ளார்.
 
அவர் வெளியிட்ட தகவல்படி, சட்லெஜ் நதியின் நீரோட்டம் கடந்த சில ஆண்டுகளில் 75% குறைந்துள்ளது. 8000 கிகா லிட்டர்கள் அளவிலிருந்த நீர், தற்போது 2000 கிகா லிட்டருக்கும் குறைந்துள்ளது.
 
இதற்கான இரண்டு முக்கிய காரணங்கள் குறிப்பிடப்படுகின்றன:
 
சீனா நதியின் பாதையை மாற்றியிருக்கலாம்.
 
இயற்கை காரணங்களால் குறைந்திருக்கலாம். ஆனால் ஹிமாலயப் பனிப்பாறைகள் வேகமாக உருகி வருவதால், நீரின் அளவு கூட வேண்டும், குறையக் கூடாது என்பது நிபுணர்களின் கருத்து.
 
இந்த நிலையில், சீனா இந்தியாவின் நீரோட்டத்தைக் கட்டுப்படுத்துகிறது என்று கூறப்பட்டாலும் இது குறித்து தெளிவான ஆதாரம் ஏதும் இல்லை என்றும் இருப்பினும் சீனாவின் நடவடிக்கைகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
 
Edited by Siva