ரூ.2800 கொடுத்தால் 5ஜி வசதியுடன் ஸ்மார்ட்போன் கிடைக்குமா? முன்னணி நிறுவனத்தின் அசத்தல் அறிவிப்பு..!
இந்தியாவில் குறைந்த விலையில் ஸ்மார்ட்போன்களை வெளியிட்டு வரும் ஏஐ பிளஸ் நிறுவனம், தற்போது புதிய நோவா 5ஜி (Nova 5G) மாடல் தொலைபேசியை அறிமுகப்படுத்தியுள்ளது. ஆகஸ்ட் 1 முதல் விற்பனைக்கு வரவுள்ள இந்த ஸ்மார்ட்போன், பட்ஜெட் விலையில் 5ஜி அனுபவத்தை வழங்குகிறது.
இந்த போன் 6ஜிபி மற்றும் 8ஜிபி ரேம் விருப்பங்களுடன் வருகிறது. 128ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் கொண்டது. இதனை 1 டிபி வரை மெமரி கார்டு மூலம் விரிவாக்கம் செய்யலாம்.
புகைப்படங்களுக்காக 50 மெகாபிக்சல் பின்புறக் கேமராவும், செல்ஃபிக்களுக்காக 5 மெகாபிக்சல் முன்புறக் கேமராவும் இதில் உள்ளன.
5000 எம்ஏஎச் திறன் கொண்ட பேட்டரி நீண்ட நேரம் சார்ஜ் தாங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
டி8200 ப்ராசஸர் மூலம் இயங்கும் இந்த போன், மென்மையான செயல்திறனை உறுதி செய்கிறது.
6.745 இன்ச் எச்டி டிஸ்பிளே காட்சிகளைத் துல்லியமாக வழங்கும்.
இரண்டு 5ஜி சிம் கார்டுகளைப் பயன்படுத்தலாம்.
ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் மூலம் இயங்குகிறது.
ஒரு வருட வாரண்டி வழங்கப்படுகிறது.
நீலம், பர்பிள், மற்றும் பச்சை ஆகிய வண்ணங்களில் கிடைக்கிறது.
ஏஐ பிளஸ் நோவா 5ஜி ஸ்மார்ட்போன்கள் ஃபிளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு வந்துள்ளன.
இதன் விலை ₹8,499. மூன்று தவணை முறையில் தலா ₹2,833 செலுத்தி வாங்கும் வசதியும் உள்ளது.
8ஜிபி ரேம் மாடல்: இதன் விலை ₹9,999.
குறைந்த விலையில் 5ஜி ஸ்மார்ட்போனை வாங்கத் திட்டமிடுபவர்களுக்கு ஏஐ பிளஸ் நோவா 5ஜி ஒரு சிறந்த தேர்வாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Edited by Mahendran