வியாழன், 21 ஆகஸ்ட் 2025
  1. செய்திகள்
  2. தகவல் தொழில்நுட்பம்
  3. செய்திகள்
Written By Prasanth K
Last Modified: செவ்வாய், 29 ஜூலை 2025 (11:18 IST)

சீனாவை ஓரம்கட்டிய இந்தியா! அமெரிக்காவில் ஸ்மார்ட்போன் விற்பனையில் அதிரடி!

India vs China smartphone war

அமெரிக்காவில் விற்பனையாகும் ஸ்மார்ட்போன்களில் பெரும்பாலானவை இந்தியாவில் தயாரிக்கப்பட்டவை என செய்திகள் வெளியாகியுள்ளது.

 

உலகம் முழுவதும் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்கள் பயன்பாடு அதிகரித்துள்ள நிலையில் பல நாட்டு நிறுவனங்களும் ஸ்மார்ட்போன்களை தயாரித்து வருகின்றன. முக்கியமாக குறைந்த விலையில் பல்வேறு சிறப்பம்சங்களுடன் ஸ்மார்ட்போன் வெளியிடுவதில் சீன நிறுவனங்கள் முன்னணியில் உள்ளன.

 

இந்நிலையில் அமெரிக்காவில் ஸ்மார்ட்போன்கள் விற்பனை குறித்த ஆய்வில், அமெரிக்காவில் விற்பனையாகும் பெரும்பாலான ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் தயாரிக்கப்பட்டவை என தகவல்கள் வெளியாகியுள்ளது. அமெரிக்க ஸ்மார்ட்போன் சந்தியில் 44 சதவீதம் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஸ்மார்ட்போன்கள். முன்னதாக ஸ்மார்ட்போன் தயாரிப்பில் சீனா உச்சத்தில் இருந்த நிலையில் அமெரிக்காவில் 60 சதவீதம் சந்தை மதிப்பை கட்டுக்குள் வைத்திருந்த நிலையில் தற்போது 25 சதவீதம் மட்டுமே சீனா வசம் உள்ளது.

 

இதற்கு காரணம், இந்தியாவில் பன்னாட்டு ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் தங்கள் தயாரிப்பு ஆலைகளை அதிகப்படுத்தியது, அமெரிக்கா - சீனா இடையேயான வர்த்தக மோதல் உள்ளிட்ட பல காரணங்கள் சொல்லப்படுகின்றன. ஆனால் அதேசமயம் இந்தியாவில் அதிகமாக விற்பனையாகும் ஸ்மார்ட்போன்களில் பெரும்பாலானவை சீன தயாரிப்புகளே என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் சீன ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் 60 சதவீத வர்த்தகத்தை கொண்டுள்ளன.

 

Edit by Prasanth.K