முடிவுக்கு வந்த ஈரான் போர்!.. இந்திய பங்கு சந்தை ஏற்றம்....
ஈரான் அணு ஆயுதம் தயாரிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அமெரிக்காவும், இஸ்ரேலும் ஒன்றிணைந்து கடந்த பிப்ரவரி மாதம் ஈரானை தாக்கின. இதனால் வளைகுடா நாடுகளிலிருந்து இந்தியா உள்ளிட்ட பல நாடுகளுக்கும் கச்சா எண்ணெய் கொண்டு செல்லப்படும் கப்பல் வழித்தடமான ஹார்மூஸ் நீரிணையை ஈரான் மூடியது. இதன் காரணமாக உலகெங்கும் எரிபொருட்கள் தட்டுப்பாடு ஏற்பட்டதோடு எரிபொருள் விலையும் உயர்ந்தது.
இந்தப் போரில் பல லட்சம் கோடிகளை அமெரிக்கா செலவு செய்தது. ஆனாலும் ஈரானை கட்டுப்படுத்த முடியவில்லை. ஒரு பக்கம் ஈரான் மீது அமெரிக்கா போர் தொடுத்ததை அமெரிக்க மக்களே விரும்பவில்லை. சமீபத்தில் நடந்த நாடாளுமன்ற இடைத்தேர்தலில் அதிபர் ட்ரம்பின் குடியரசு கட்சி படுதோல்வி அடைந்தது.
ஈரான் மீது அமெரிக்கா போர் தொடுத்துதான் இதற்கு காரணம் என டிரம்ப்பே ஒத்துக் கொண்டார். அதோடு ஈரானுடன் போர் முடிவுக்கு வருவதாக சமீபத்தில் அவர் அறிவித்தார். இந்நிலையில், டிரம்பின் அறிவிப்பால் இன்று இந்திய பங்கு சந்தைகள் மிகப்பெரிய ஏற்றத்துடன் வர்த்தகமாக வருகின்றன. நிஃப்டி 300 புள்ளிகளுக்கும் மேலும், சென்செக்ஸ் 1100 புள்ளிகளுக்கு மேலும் உயர்ந்து வர்த்தகமாகி வருகின்றன.