வெள்ளி, 28 நவம்பர் 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. விமர்சனம்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 28 நவம்பர் 2025 (11:44 IST)

டார்க் காமெடி திரைப்படமான ரிவால்வர் ரீட்டா' தேறியதா? கீர்த்தி சுரேஷ் நடிப்பு எப்படி?

டார்க் காமெடி திரைப்படமான ரிவால்வர் ரீட்டா' தேறியதா? கீர்த்தி சுரேஷ் நடிப்பு எப்படி?
கீர்த்தி சுரேஷ், ராதிகா சரத்குமார் நடிப்பில், ஜே.கே. சந்துரு இயக்கத்தில், டார்க் காமெடி பாணியில் உருவாகியுள்ள திரைப்படம் 'ரிவால்வர் ரீட்டா'. 
 
நில மோசடி, ரௌடிகள் சண்டை ஆகியவற்றுடன் கதை தொடங்குகிறது. புதுவையின் பெரிய ரௌடியான டிராகுலா பாண்டியன், போதையில் வழிதவறி ரீட்டா (கீர்த்தி சுரேஷ்) வீட்டிற்குள் நுழைந்து இறந்து போகிறார். நடுவீட்டில் இருக்கும் இந்த தாதா பிணத்தால் ரீட்டாவின் குடும்பம் என்னென்ன சிக்கல்களை சந்திக்கிறது, ரௌடி மகன்களிடமிருந்து எப்படி தப்பிக்கிறது என்பதே கதை.
 
கீர்த்தி சுரேஷ் தனது ரீட்டா கதாபாத்திரத்தில் கச்சிதமாக பொருந்தி, ஆக்ஷன் மற்றும் நகைச்சுவையில் ஈர்க்கிறார். ராதிகா உள்ளிட்ட பிற நடிகர்களும் தங்கள் பங்கை சிறப்பாக செய்துள்ளனர். எனினும், படத்தின் பிரதான குறைபாடு நகைச்சுவை காட்சிகளின் பஞ்சம் மற்றும் பழக்கப்பட்ட காமெடிகள் மட்டுமே. டார்க் காமெடிக்கு ஏற்ற களம் இருந்தபோதிலும், போதிய சிரிப்பு வரவில்லை. ரெடின் கிங்ஸ்லியின் பங்கு சில இடங்களில் சோர்வூட்டுகிறது.
 
இருப்பினும், இயக்குநர் ஜே.கே. சந்துரு, பல கதாபாத்திரங்களையும் சிக்கல்களையும் கொண்டுள்ள ஒரு சவாலான கதையை, குழப்பம் இல்லாமல், தொய்வின்றி நகர்த்தி முடிச்சுகளை அவிழ்ப்பதில் சாமர்த்தியம் காட்டியுள்ளார்.
 
ஒளிப்பதிவாளர் தினேஷ் கிருஷ்ணனின் பணி நேர்த்தியாக உள்ளது. ஒட்டுமொத்தத்தில், நல்ல பொழுதுபோக்கிற்கான அனைத்து அம்சங்களும் இருந்தும், நகைச்சுவை மட்டும் குறைவாக இருப்பதால், 'ரிவால்வர் ரீட்டா' திரையில் சற்று தடுமாறினாலும், குடும்பத்துடன் சென்று பார்க்கக்கூடிய ஒரு நல்ல பொழுதுபோக்கு திரைப்படம் என்பதில் சந்தேகமில்லை.
 
Edited by Mahendran