வெள்ளி, 21 நவம்பர் 2025
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. சந்தை நிலவரம்
Written By Mahendran
Last Modified: திங்கள், 24 மார்ச் 2025 (17:05 IST)

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு மீண்டும் உயர்வு.. இறக்குமதியாளர்களுக்கு லாபம்..!

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு மீண்டும் உயர்வு.. இறக்குமதியாளர்களுக்கு லாபம்..!
டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு குறைந்து கொண்டே கடந்த சில மாதங்களுக்கு முன் சென்ற போது எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சனம் செய்தன. இந்தியாவின் பொருளாதாரமே வீழ்ச்சி அடைந்து வருவதாக கூறப்பட்ட நிலையில் பத்திரிகைகளும் இது குறித்து காரசாரமாக செய்திகள் வெளியிட்டன.
 
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்ந்து கொண்டே வருகிறது என்பதும் இதனால் இறக்குமதி ஆளர்களுக்கு நல்ல லாபம் கிடைத்து வருவதாகவும் கூறப்படுகிறது.
 
இன்றைய வர்த்தக முடிவில் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு எவ்வளவு என்பதை தற்போது பார்ப்போம்.
 
 இன்றைய வர்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 12 காசுகள் உயர்ந்துள்ளது. வர்த்தக முடிவில் இந்திய ரூபாயின் மதிப்பு 85.86 ஆக முடிந்தது. 
 
வங்கிகளுக்கு இடையேயான அந்நிய செலாவணி சந்தையில், இந்திய ரூபாய் 85.93 ஆக தொடங்கி வர்த்தகமானது. ஆனால் சிறிது சிறிதாக உயர்ந்து 85.86 ஐ தொட்டது. கடந்த  வெள்ளிக்கிழமையன்று அன்று அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 38 காசுகள் உயர்ந்து ரூ.85.98-ஆக முடிந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran