2,500 டாஸ்மாக் கடைகளை தனியாருக்கு விட தவெக அரசு திட்டமா? முதல்வர் தீவிர பரிசீலனை...
கடந்த 23 ஆண்டுகளுக்கு பிறகு தமிழக டாஸ்மாக் துறையில் ஒரு மிகப்பெரிய திருப்பத்தை ஏற்படுத்த கூடிய அதிரடி திட்டங்களை முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான தவெக அரசு பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
முதல்வர் பதவியேற்றவுடன் கோவில், பள்ளி அருகில் இருந்த 717 கடைகள் மூடப்பட்ட நிலையில், தற்போது தமிழ்நாடு முழுவதும் 4,048 சில்லறை மதுபான கடைகள் இயங்கி வருகின்றன. இதில் முறைகேடுகளை தடுக்கும் பொருட்டு, முதற்கட்டமாக மாநகராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளில் உள்ள 2,500 கடைகளை தனியாருக்கு வழங்குவது குறித்து தீவிரமாக ஆலோசிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகின்றது.
கடந்த காலத்தில் மதுபான விற்பனையில் பல கோடி ரூபாய் முறைகேடுகள் நடைபெற்றதாக குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், வருவாய் கசிவை தடுத்து வெளிப்படைத்தன்மையை கொண்டுவர கர்நாடகா மற்றும் கேரளா முறையை பின்பற்றி இந்த திட்டம் பரிசீலனையில் உள்ளதாக தெரிகிறது.
இதற்கிடையே, டாஸ்மாக்கைத் தனியார் மயமாக்கும் எண்ணம் அரசுக்கு இல்லை என்று மதுவிலக்குத்துறை அமைச்சர் கே. விக்னேஷ் மறுப்பு தெரிவித்துள்ளார். இருப்பினும், மறுபுறம் டாஸ்மாக்கை முழுமையாக தனியார்மயமாக்காமல் மூடிவிட வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் போன்ற தலைவர்களும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இத்திட்டம் குறித்து அதிகாரப்பூர்வ அரசாணை வெளியாகவில்லை என்றாலும், தவெக அரசின் அடுத்தடுத்த நடவடிக்கைகளைக் களம் உன்னிப்பாகக் கவனித்து வருகிறது.

